வேலைநிறுத்த போராட்டத்தினால் விமான சேவைகள் இரத்து!

Wednesday, January 16th, 2019

சம்பள உயர்வு கோரி விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமை காரணமாக, ஜேர்மனியிலுள்ள விமான நிலையங்களில் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்யும் பாதுகாப்பு ஊழியர்கள் 18 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 1200 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் 220,000 பயணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பேர்லின், மியூனிச், ஸ்ருட்கார்ட், ஹனோவர், பிறீமன், ஹம்பேர்க், லெய்ப்சிக், ட்ரெஸ்டென், எர்பேர்ட், டோட்முண்ட் ஆகிய விமான நிலையங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

Related posts: