வெள்ளி கிரகமே அடுத்த இலக்கு: இஸ்ரோ தலைவர் கிரண் குமார்

Wednesday, February 15th, 2017

வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோலை அனுப்புவதே அடுத்த இலக்கு என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது:

செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான செயற்கைக்கோளை அனுப்புவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மங்கள்யான் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாயில் எதுமாதிரியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்ற திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும். இப்போது, மங்கள்யான் விண்கலத்தின் ஆயுள் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

104 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. இந்தச் செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் விண்ணில் பிரிக்கப்படவில்லை. இவை அனைத்தும் 25 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

ஏனென்றால் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சூழல் இருந்தது. இப்போது உலகளவில் நானோ செயற்கைக்கோள்கள் அதிகம் விண்ணுக்கு அனுப்பு பல நாடுகள் திட்டமிட்டுள்ளன. இஸ்ரோவுக்கு இதுபோன்ற செயற்கைக்கோள்களை அனுப்ப ரூ.400 கோடிக்கு திட்டங்கள் வந்துள்ளன.

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கான நிதியை  மத்திய அரசு தொடர்ந்து பரீசீலித்து வருகிறது. விரைவில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடடங்கப்படும். ராக்கெட் ஏவுதலுக்கான செலவை குறைப்பதற்கு இஸ்ரோ தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் கிரண் குமார்.

இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின், இயக்குநர், மயில்சாமி அண்ணாதுரை: சந்திராயன் 2 திட்டத்துக்கான வேலைகள் விரைவில் தொடடங்கப்படவுள்ளது. இதுவரை இஸ்ரோவால் இதுவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 97 செயற்கைக்கோள்கள் அனுப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்க்குள்ளாக இந்த எண்ணிக்கை நூறாகும். விரைவில் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று செயற்க்கைகோள்கள் அனுப்பட்டடவுள்ளது என்றார் அவர்.

kiran_kumar_3078109f

Related posts: