வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு – மாலியில் சம்பவம்!

Friday, May 17th, 2019

மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. வீடுகளை இழந்து மக்கள் முகாம்களில் தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொலிசார் மீட்பு பணியினர் ஓய்வின்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: