வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் – டிரம்ப் !

Wednesday, November 23rd, 2016

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தை அறிவித்திருப்பது சர்வதேச அரங்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சித்தலைவர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் பதவியேற்றதில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு செயல்படுத்த உள்ள திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளியிட்ட பல அறிவுப்புகளும் அடங்கியுள்ளது. மேலும் பசிபிக் நாடுகளுக்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் வேலைவாய்ப்பில், அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கிடையே உள்ள எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு அகதிகள் உள்ளே வருவது தடுக்கப்படும் என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து ஒபாமா கொண்டுவந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்கள், ஒப்பந்த காலம் முடிந்ததும் வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளில் இருந்து அதிகளவில் அகதிகள் அமெரிக்கா வருவது படிப்படியாகக் குறைக்கப்படும் என பல்வேறு வகையான திட்டங்களை தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சர்வதேச அரங்கில் டிரம்பின் அறிவிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tamil_News_large_165483620161123034519_318_219

Related posts: