வெனிசுலா நாட்டிலும் ரூபாய் தாள் தடை!

வெனிசுலாவில் தற்போது கச்சா எண்ணை விலை சரிவால் பெரும் பொருளாதார சரிவை எதிர் நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால் பணத் தட்டுப்பாடு மற்றும் உணவு பொருள் பற்றாக்குறை , போன்ற அத்தியாவசிய குறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார சரிவு காரணமாக வெனிசுலாவில் ரூபாயான ‘பொலிவார்’ மதிப்பு சர்வதேச அளவில் சரிந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது 100 பொலிவார் மதிப்பு 2 சென்ட் மதிப்பாக அதாவது அமெரிக்க டாலரில் 50ல் ஒரு பங்காக குறைந்து விட்டது.
உணவு பொருட்கள் கடத்தப்படுவதால் அவை கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என போர்க் கொடி தூக்கியுள்ளனர். இதனால் வெனிசுலாவில் அரசியல் ஸ்திர தன்மை இன்றி குழப்பம் நிலவுகின்றது.
எனவே நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை தவிர்க்க ‘ பொலிவார்’ ரூபாய் நோட்டுகளை ஒழித்து அவற்றின் மதிப்பு நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான அறிவிப்பை அதிபர் நிகோலஸ் மதுரோ நேற்று டெலிவிஷன் மூலம் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை வருகிற 15ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. கப்பல், விமானம் மற்றும் வாகன பயன்களுக்கு ‘பொலிவார்’ ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாது.
இதன்மூலம் தவறான வழியில் வெளி நாட்டு பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும் கடத்தல், உணவு பொருள் தட்டுப்பாடு, உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|