”ஆளில்லா விமானம் மூலம்வெனிசுலா அதிபரை கொல்ல சதி !

Monday, August 6th, 2018

”ஆளில்லா குட்டி விமானம் மூலம், என்னைக் கொல்ல சதி நடந்தது,” என, குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய, வெனிசுலா நாட்டின் அதிபர், நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டி உள்ளார்.

தென் அமெரிக்க நாடான, வெனிசுலா, எண்ணெய் வளம் மிகுந்த நாடு. இங்கு அதிபராக இருந்த, ஹக்கோ சாவேஸ், 2013ல் இறந்த பின், நிகோலஸ் மதுரோ, அதிபராக பதவி ஏற்றார்.நேற்று முன்தினம், கரகாஸ் நகரில், வெனிசுலா ராணுவத்தின், 81வது ஆண்டு விழா நடந்தது. அப்போது, ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது.

அதன்பின், அதிபர் நிகோலஸ் மதுரோ, தொலைக்காட்சி மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, வானில் இருந்து பறந்து வந்த, சிறிய ரக ஆளில்லா குட்டி விமானம், திடீரென வெடித்துச் சிதறியது. இதைப் பார்த்த, அதிபர் மதுரோ அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, அதிபர் மதுரோவை, பாதுகாப்பு படையினர் பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த குண்டுவெடிப்பில், ஏழு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பான, ‘வீடியோ’வையும், வெனிசுலா அரசு வெளியிட்டு உள்ளது.அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியதாவது:என்னைக் கொல்வதற்கு, சதி நடந்துள்ளது. என் கண் எதிரே, ஒரு பொருள் பறந்து வந்து வெடித்துச் சிதறியது. இதில், ஏழு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கொலம்பியா நாடும், அமெரிக்காவின் சதியும் காரணமாக இருக்கும் என, நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், வெனிசுலா அதிபரின் குற்றச்சாட்டை, கொலம்பியா அரசு மறுத்து விட்டது.

Related posts: