கொங்ஹொங்கில் குழாய் வீட்டுத் திட்டம்!

Friday, January 26th, 2018

கொங்ஹொங்கில் பெருகிவரும் சனத்தொகைக்கு தங்குமிட வசதியை சீராக்கும் வகையில் குழாய் வடிவிலான வீட்டுத்திட்டமொன்றை கட்டடக்கலை நிறுவனமொன்றுகண்டுபிடித்துள்ளது.

இந்தக் குழாய் வீடுகளை ஜேம்ஸ் லோ சைபர்ரெக்சர்  ( James Law Cybertecture ) எனும் நிறுவனமே கண்டுபிடித்துள்ளதுடன் இது தொடர்பான கண்காட்சி கடந்த டிசெம்பரில்கொங்ஹொங்கில் நடைபெற்றது.

இந்தக் குழாய் வீடுகள் 16 அடி நீளமும் 7 அடி விட்டத்தைக் உடையதாகவும் 100 முதல் 120 சதுர அடி தரை காணப்படுகின்றது. அதற்குள் மடிப்புக் கட்டில் குளிர்சாதனப்பெட்டிகுளியலறை சமையல் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறான வீடுகளை குறைந்த செலவில் மொட்டை மாடிகள் மற்றும் சிறிய இடங்களில் நிறுவ முடியுமென அந்நிறுவனம் கூறியுள்ளது.

கொங்ஹொங்கில் கடந்த வருட டிசெம்பரில் ஒரு சதுர அடி நிலப்பரப்பின் விலை 1592 அமெரிக்க டொலராக இருந்தது.

ஹொங்கொங்கில் பெருகிவரும் சனத்தொகைக்கு குழாய் வீடுகள்  தீர்வினைத் வழங்குமா  என்பது கேள்விக்குறியே.

Related posts: