வெனிசுலாவில் பாரிய போராட்டம் – 16 பேர் பலி!

Friday, January 25th, 2019

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மாதுரோவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட நாடுதழுவிய போராட்டங்களில் 16 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பங்குபற்றாத நிலையில் நிக்கோலஸ் மாதுரோ வெற்றிபெற்றார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்திருந்ததுடன், தொடர்ச்சியான எதிர்ப்பினையும் வெளியிட்டுவந்தன.

இந்த நிலையில், வெனிசுலா இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் நிக்கோலஸ் மாதுரோவிற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, வெனிசுலா முழுவதிலும் பாரிய அளவில் ஜனாதிபதி ஆதரவு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த போராட்டங்களால் 16 பேர் மரணமடைந்துள்ளதாக வெனிசுலா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், வெனிசுலாவின் ஜனாபதியாக வெனிசுலா சபாநாயகர் தன்னை பிரகடனம் செய்துகொண்டுள்ளதுடன், இதனை அமெரிக்கா, கனடா, சிலி, பிரேசில், ஆர்ஜன்டீனா போன்ற நாடுகள் அதற்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

அத்துடன், நிக்கோலஸ் மாதுரோ பதவி விலக வேண்டும் என்று அமெரிக்காக வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: