நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்ற தெரேசா மே!

Friday, January 18th, 2019

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரதான எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரேசா மே இந்த அவசர சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.

பிரெக்ஸிட் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரேசா மே சந்திக்கவுள்ளதாக பிபிச் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதான பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தனக்கு ஆதரவாக 325 வாக்குகளையும், எதிர்ப்பாக 306 வாக்குகளையும் பெற்று தெரேசா மே வெற்றி பெற்றார்.

எனினும், தெரேசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பும் இணைந்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே, பிரெக்ஸிட் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரேசா மே சந்திக்கவுள்ளதாக பிபிச் செய்தியில் மேலும் வெளியிட்டுள்ளது.

Related posts: