விரிவடைகிறது மலேசிய அரசு முதலீட்டு நிறுவன மோசடி விசாரணை !
Thursday, October 6th, 2016
மலேசியாவின் அரச முதலீட்டு நிறுவனமான 1எம்பிடி சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் மோசடி ஒன்று குறித்த தமது குற்றவியல் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்விட்சர்லாந்து கூறியுள்ளது.
இது தொடர்பில் மலேசிய அதிகாரிகளிடமிருந்து கூடுதலான ஒத்துழைப்பை ஸ்விஸ் அரச வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
1எம்பிடியின் துணை நிறுவனம் ஒன்றால் இயற்கை வளங்களில் முதலீடு செய்யப்பட்டு மாயாமான 800 மில்லியன் டாலர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் மலேசிய அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என ஸ்விஸின் தலைமை அரச வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.முதலீட்டில் மோசடி நடைபெற்றுள்ளதை மூடி மறைக்க இல்லாத நிறுவனம் ஒன்றை இருப்பதுபோல் காட்டி, அதிக வட்டி தருவதாக கவர்ந்திழுத்து பின்னர் ஏமாற்றிவிடும் வகையில் மலேசிய அதிகாரிகள் நடந்துள்ளனர் என ஸ்விஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்பித்தலாட்டத்தில் ஸ்விஸ் நிதித்துறையின் மூலம் சந்தேகப்படும் வகையில் சில பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதை தான் அடையாளம் கண்டுள்ளதாக ஸ்விஸின் தலைமை அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரதமர் நஜீப் ரஜாக்கும் இதில் தொடர்புபட்டுள்ளார் எனக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

Related posts:
|
|
|


