மகாத்மா காந்தி கொலை வழக்கு : மீண்டும் ஒத்திவைப்பு!

Friday, November 3rd, 2017

காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948 ஆம் ஆண்டு டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் கைது செய்யப்பட்டு 1949 ஆம் ஆண்டு தூக்கில் போடப்பட்டனர்.

காந்தி கொல்லப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தக் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பட்னிஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

காந்தியின் கொலையில் 3 ஆவது நபர் இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது எனவும் அது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டு இருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இதில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் சரணை நியமித்தது.

இந்த நிலையில் காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எம்.எம்.சந்தானகவுடர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விடயத்தில் தனக்குத் தேவையான ஆவணங்கள் இன்னும் கிடைக்காதமையால் 4 வாரம் அவகாசம் வேண்டும் என அம்ரேந்தர் சரண் நீதிபதிகளிடம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Related posts: