துருக்கி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 500 ஐ தாண்டியது – 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளானதாகவும் தகவல்!

Monday, February 6th, 2023

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி  04:17 மணிக்கு (01:17 GMT) காஸியான்டெப் நகருக்கு அருகே 17.9 கி.மீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 284 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே தெரிவித்தார்.

அத்துனட. சிரியாவில் 230 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் மக்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் எதிர்வரும்  பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் பெரும் இடிபாடுகளின் கீழ் மீட்புப் பணிகள் இடம்பெறுகின்றன.

தமது நாட்டில் 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உள்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் 2,323 பேரும், சிரியாவில் 639 பேரும் காயமடைந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: