விமானம் பயணித்த சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கும் உடல்நலக்குறைவு!

கனடாவில் விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேலுக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் ஏறிய சில நிமிடங்களில் அனைவரும் கண் எரிச்சல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
விபரமறிந்து விரைந்துவந்த மருத்துவ குழுவினர் முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 10 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கொரோனா தாண்டவம்: நிலைகுலைந்தது அமெரிக்கா! விசா தடைவிதிக்க போவதாக ட்ரம்ப் அறிவிப்பு!
அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு படகு விபத்து – 22 பேர் உயிரிழப்பு!
உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை புட்டினின் அதிரடி அறிவிப்பு...
|
|