விசேட தூதுவர் நியமனம்!
Sunday, September 25th, 2016
ஆசிய ஆயர்கள் மாநாடுகள் கூட்டமைப்பின் 11ஆவது மாநாட்டிற்கு கார்டினல் Telesphore Placidus Toppo என்பவரை போப் பிரான்சிஸ் விசேட தூதுவராக பெயரிட்டுள்ளார்.
கார்டினல் Telesphore Placidus Toppo இந்தியாவின் ராஞ்சியை சேர்ந்தவராவார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் உள்ள குடும்பங்கள் நற்செய்தியால் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாநாடு கொழும்பு நகரில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளும் வகையில் உகந்த சூழலை உருவாக்குங்கள் - நேபாளம்!
தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வட கொரியா திட்டம்?
இந்தியா - இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொல...
|
|
|


