வலி நிவாரணியாகும் கடல் வாழ் நத்தையின் நஞ்சு!
Friday, February 24th, 2017
உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடியவகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இம் மாத்திரையினை அளவுக்கு அதிகமாக உள்ளெடுப்பதால் நாள்தோறும் 90 பேர் அமெரிக்காவில் மரணிப்பதாக ஆய்வுதகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது கடலில் வாழும் Conus regius எனப்படும் சிறியவகை நத்தையின் நச்சுப்பதார்த்தமானது வலி நிவாரணியாக செயற்படக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை Opioid மாத்திரைக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என குறித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வகை நத்தைகள் கரீபியன் கடற்பகுதிகளிலேயே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


