ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க  முகம்மது அலிக்கு இறுதி அஞ்சலி!

Saturday, June 11th, 2016

மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலியின் இறுதிச் சடங்கு கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் நேற்று  நடைபெற்றது.

குத்துச் சண்டை உலகில் பல சாதனைகளைப் படைத்து வியக்க வைத்தவர் முகம்மது அலி. முடி சூடா மன்னராக திகழ்ந்த அலி, 56 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் கண்ட சாதனையாளர். கடந்த 30 ஆண்டுகளாக ‘பார்கின்சன்டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.

சமீப காலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளாலும் அவர் பாதிக்கப்பட்டார். சுவாசம் சார்ந்த பிரச்சனைகளால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் சில தினங்களுக்கு முன்முகமது அலியை அவரது குடும்பத்தார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அலியின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அலியின் உடல் சொந்த ஊரான லூயிஸ்வில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இதில் பலஆயிரம் பேர் கலந்து கொண்டு அலிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இவ்வளவு பேர் குவிந்ததால் லூயிஸ்வில்லி நகரே ஸ்தம்பித்தது. ஜானசா எனப்படும் இறுதித் தொழுகையில் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: