போரிஸ் ஜான்சன் கருத்துக்களில் முரண்பாடு!

Sunday, October 16th, 2016

ஜூன் மாதம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி பிரசாரம் செய்த முன்னிலை அரசியில்வாதிகளில் ஒருவர், பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்து கட்டுரை எழுதியுள்ளதை பிரிட்டன் நாளிதழ் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

வெளியாகாத அந்த கட்டுரையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக இருப்பதால் ஆகின்ற செலவு மிகவும் குறைவானது என்று விவரித்து, பிரிட்டன் வெளியேறுவதால் சந்திப்பதாக அவர் நம்புகின்ற பொருளாதார அச்சுறுத்தல்களையும், பிரிட்டனின் எதிர்காலத்தையும் பற்றி போரிஸ் ஜான்சன் எச்சரித்திருக்கிறார்.

ஆனால், இந்த விவாதங்கள் அனைத்தும், ஜான்சன் பரப்புரை மேற்கொண்டபோது தெரிவித்த கருத்துக்கள் அனைத்திற்கும் முரணாக அமைந்துள்ளன. அவருடைய கருத்துக்களை தெளிவுப்படுத்தி கொள்வதற்கு உதவுவதற்கு மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டதாக ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

_91943579_a7f03b34-a014-40c0-909d-9859d2275d61

Related posts: