வரலாறு காணா வறட்சியால் தவிக்கும் தாய்லாந்து!

Thursday, April 28th, 2016

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள்.

தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்கள் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன. இந்த ஆண்டின் நெல்லுற்பத்தி முப்பது சதவீதம் குறையலாம் என்று அஞ்சப்படுகின்றது.

தாய்லாந்தின் வடகிழக்கில் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு செனற பிபிசி செய்தியாளர் குழு அங்குள்ள நிலைமைகள் குறித்து வழங்கும் நேரடிச் செய்தித்தொகுப்பு.

Related posts: