வரலாறு காணா வறட்சியால் தவிக்கும் தாய்லாந்து!

இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைத் தந்த எல் நினோ பருவநிலைப் போக்கை விஞ்ஞானிகள் இதற்கான காரணமாகக் கூறுகிறார்கள்.
தாய்லாந்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் காய்ந்து போனதால் நாட்டின் பல பகுதிகள் வறண்டு போக, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்கள் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன. இந்த ஆண்டின் நெல்லுற்பத்தி முப்பது சதவீதம் குறையலாம் என்று அஞ்சப்படுகின்றது.
தாய்லாந்தின் வடகிழக்கில் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு செனற பிபிசி செய்தியாளர் குழு அங்குள்ள நிலைமைகள் குறித்து வழங்கும் நேரடிச் செய்தித்தொகுப்பு.
Related posts:
இளவரசி டயானா தொடர்பில் தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இலங்கை விதித்த தடைக்கும் ரஷ்யாவின் தடைக்கும் தொடர்பில்லை !
பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து : பெருவில் 36 பேர் பலி?
|
|