வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு!
Sunday, June 30th, 2019
வட தென் கொரியாக்களை பிரிக்கும் எல்லையில் தம்மை வந்து சந்திக்குமாறு வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுன்னை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
டுவிட்டர் தளத்தின் ஊடாக இந்த அழைப்பினை அவர் விடுத்துள்ளார்.அப்படி அவர் வந்தால் தாம் அவருடன் கைக்குலுக்கி நலம் விசாரிப்பேன் என அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.இந்த செய்தியினை வரவேற்றுள்ள வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பு மிகவும் சுவார்சியமானதாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த அழைப்பு தமக்கு உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை என வட கொரியா குறிப்பிட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி, தென் கொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தென் கொரிய தலைவர்களுடன், அவர் வடகொரிய அணு திட்டம் குறித்தும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தென் கொரியா சென்றுள்ளார்.
Related posts:
|
|
|


