சட்டவிரேத கடற் பயணம்: நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி!

Friday, October 28th, 2016

சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இவர்களில் பல்வேறு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த 20 பேர் வரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாகவும் லிபியா கடற்படையிர் தெரிவித்துள்ளனர்.உள்நாட்டு யுத்தம், சீரற்ற பொருளாதாரம், ஸ்தீரமற்ற அரசியல் கொள்கை போன்ற காரணங்களினால் ஆபிரிக்க, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இறப்பர் படகு ஒன்றில் குறித்த அகதிகள் பயணித்துள்ளனர்.எனினும், கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து குறித்த இறப்பர் படகு கடந்த புதன் கிழமை கடலில் மூழ்கிப் போனதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய தரைக்கடல் ஊடாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆண்டாக 2016ஆம் ஆண்டு காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ship-600x395

Related posts: