வட கொரிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் மோசமானது – ட்ரமப்!
Tuesday, March 21st, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் மிகவும் மோசமான வகையில் செயற்பட்டு வருவதாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
சர்வதேசத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் வடகொரியா, நேற்றைய தினம் புதிதாக உயர் உந்து சக்தி கொண்ட இயந்திரமொன்றை பரிசோதித்திருந்தது.இது தொடர்பில் புளோரிடாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் வடகொரிய ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சிததுள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பியாங்யொங்கில் இடம்பெற்ற அணுவாயுத பரிசோதனையில் சீனா உதவி புரிந்ததாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Related posts:
கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!
ஊடகவியலாளர் கொலை: ரஷ்யாவிற்கு எதிராக நடந்த தந்திரம்!
உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி - மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வ...
|
|
|


