வட கொரியாவுக்கு உதவும் சாத்தியக்கூறுகள் குறைவு – தென் கொரியா !
Saturday, September 24th, 2016
வட கொரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கை தொடர்நது அதனை சமாளிக்கும் விதமாக, வட கொரியாவுக்கு உதவிகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவுக்கு இந்த உதவிகளை செய்ய தென் கொரியா அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். காரணம், வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், தென் கொரியா செய்யும் எந்த உதவிகளுக்கும் அவர் அங்கீகாரத்தை பெற்றுவிடுவார் என்று நினைக்கிறார்கள்.
வட கொரியாவின் வடகிழக்கு பகுதியில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.130க்கு அதிகமானோர் இதில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த ஆண்டு வட கொரியா நடத்திய தொடர் அணு ஆயுத மற்றும் ராக்கெட் ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ந்து தென் கொரியா இந்த கடின நிலைப்பாட்டை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமெரிக்க போர் விமானம் ஜப்பானில் விபத்து!
சசிகலாவின் பிடியிலா முதல்வர் ஜெயலலிதா!
உயர் நீதிமன்றத்திடம் வெள்ளை மாளிகை கோரிக்கை!
|
|
|


