வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்யா விஜயம்!
Tuesday, September 12th, 2023
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்ய எல்லைப்பகுதியான காஸனை அடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடகொரிய மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பிற்காக வடகொரிய ஜனாதிபதி, தொடருந்து ஒன்றில் பயணித்து ரஷ்ய எல்லையை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ரஷ்யாவின் கிரம்ளின் மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காணாமல் போன மலேசிய விமானத்தின் தேடல் பணியை கைவிடும் சீன கப்பல்!
எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
விசா வழங்குவதனை நிறுத்தப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!
|
|
|


