அகதிகளை தாக்கிய பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு!

Thursday, September 8th, 2016

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்த பல அகதிகள் ஹங்கேரி-செர்பிய எல்லையைக் கடக்க தங்களது குழந்தைகளையும், உடைமைகளையும் சுமந்தவண்ணம் ஓடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு குவிந்திருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டிருந்தனர். இதில், என்ஒன் டிவி  என்ற இணைய தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் ஒளிப்பதிவாளர் பெட்ரா லஸ்லோ  குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடும் ஒருவரை தனது காலால் வேண்டுமென்றே இடறிவிடுகிறார்.

இதனால் அந்த தந்தை தன் கையில் உள்ள குழந்தையுடன் நிலை தடுமாறிக் கீழே விழுகிறார்.

இதுமட்டுமின்றி முண்டியடித்துக்கொண்டு ஓடும் சிறுபெண்ணை இப்பெண் வீடியோகிராபர் தனது கால்களால் உதைக்கவும் செய்கிறார். இச்செயல்களை ஸ்டீபன் ரிச்டர்  என்ற நிருபர் தெளிவாக படம் பிடித்து, அதை டுவிட்டரில் பகிர்ந்திருந்தாபதிவு செய்தார். சிலமணி நேரங்களுக்குள்ளாகவே அந்த வீடியோ  வைரலாகப்பரவியது. இது பெரும் சர்ச்சையானதை அடுத்து, லஸ்லோ ஹங்கேரி தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த  தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இப்பெண்ணின் மீது ஹங்கேரி அரசாங்க வழக்கறிஞர்கள் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், போலீசாரின் பாதுகாப்பினையும் மீறி எப்படி நூற்றுக்கணக்கான அகதிகள் ஒரே நேரத்தில் இப்படி எல்லையை கடந்து ஓடிவந்தனர். அதுமட்டுமின்றி அகதிகளை காலால் எட்டி உதைப்பதற்கு இனவெறி காரணம் எதுவும் இல்லவில்லை என்ற போதிலும், இவர் செய்த தவறுக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அப்பெண்ணின் செயல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அப்பெண் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-09-2015_8-00-50_am_0

Related posts: