காணாமல் போன மலேசிய விமானத்தின் தேடல் பணியை கைவிடும் சீன கப்பல்!

Tuesday, December 13th, 2016

காணமல் போன மலேசிய விமானமான எம்.எச் 370 குறித்த தேடுதலில் ஈடுபட்ட ஒரு சீன கப்பல், ஷாங்காய் திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த தேடுதல் முயற்சியில் தற்போது ஒரு கப்பல் மட்டுமே ஈடுபட்டுள்ளது.

கடந்த 2014 மார்ச் மாதத்தில், 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது மலேசிய பயணிகள் விமானமான எம்.எச் 370 காணாமல் போனது.

காணாமல் போன விமானம் குறித்து கடல் படுகை முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட போதிலும், காணாமல் போன விமானம் இருக்குமிடம் கண்டறியப்படவில்லை.

ஆனால், விமானத்தின் சில சிதை பொருள்கள், கடல் படுகையில் பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் மீட்கப்பட்டது.

இதனிடையே, நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான ஒரு கப்பல் காணாமல் போன விமானம் விழுந்திருக்க கூடும் என்று நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இந்த கப்பலின் தேடல் பணி வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்த பின்னர், விமானத்தை தேடும் இந்தக் கப்பலின் பணி இடைநிறுத்தப்படும்.

_92944519_mh370_640x360_afp_nocredit

Related posts: