வடகொரிய சந்திப்பில் பலனில்லை – டொனால்ட் ட்ரம்ப்!
Thursday, May 24th, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான சந்திப்பு, பலனளிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அவர்களுக்கு இடையிலான சந்திப்பானது அடுத்த மாதம், சிங்கப்பூரில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக அமெரிக்கா தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்தல், கைவசம் உள்ள அணு ஆயுதங்களை அழித்தல் போன்ற பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், கிம் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது சிறப்பான ஒன்றாக இருக்கும் என தெரிவித்த ட்ரம்ப், இந்த சந்திப்பு ஜூன் 12 ஆம் திகதி நடப்பது பலனளிக்கும் விடயமாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் - வடகொரியா!
அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து: வடகொரியாவில் 200 பேர் வரை பலி!
பேருந்து விபத்து: உகண்டாவில் 19 பேர் உயிரிழப்பு!
|
|
|


