வடகொரியா வங்கிகள் மீது அமெரிக்கா தடை !

Friday, September 29th, 2017

வடகொரியா மேற்கொண்டு வரும் அணு அயுத சோதனைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீதும், 26 அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக வடகொரியா மீது அமெரிக்க பல தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், வடகொரியாவிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த எட்டு வங்கிகள் மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

அதனை தொடர்ந்து அவ்வங்கிகளை சேர்ந்த 26 வங்கி அதிகாரிகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவில் அவ்வங்கிகளின் அனைத்து சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் “இந்த தடைகளின் மூலம் வடகொரியாவை முழுமையாக தனிமைபடுத்தி கொரியா தீபகற்பத்தை சமாதானம் நிறைந்த மற்றும் அணுஆயுதம் இல்லாத பகுதியாக மாற்றும் எண்ணத்தை நிறைவேற்ற முடியும்”, என கூறியுள்ளார்.

Related posts: