வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் தீர்மானம்!

Friday, May 12th, 2017

வடகொரியா மீது மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடும் தடைகளையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதை அடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய கட்டத் தடைகளை விதித்திருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மேலும் சில தடைகளை விதிக்க ஜேர்மன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

வடகொரியா தனது ஆறாவது அணு ஆயுதத்தை பரிசோதனை செய்யத் தயாராகி வருவதாக அமெரிக்காவும் – தென்கொரியாவும் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை அடுத்து கொரிய வளைகுடாவில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா தனது போர்ப் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பலையும் கொரிய வளைகுடாவிற்கு அனுப்பிவைத்துள்ளதுடன் தென்கொரியாவுடன் போர் பயிற்சிகளிலும்ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு பதிலடியாக வடகொரியாவும் அடுத்தடுத்து பெலஸ்ரிக் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தி வருவதுடன் பாரிய போர்ப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையிலேயே வடகொரியாவின் அணுத் திட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் மீது புதிதாக கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் அரசாங்கம் தீரமானித்திருக்கின்றது.

இதற்கமைய ஜேர்மன் தலைநகர் பேர்லினில் உள்ள வடகொரியத் தூதரகம் கொள்வனவு செய்துள்ள சொத்துக்களையும் குத்தகைக்கு எடுத்துள்ள சொத்துக்களையும் முடக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் வெளிவிகார அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

Related posts: