வடகொரியா மிது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதுவித பயனுமில்லை – புடின்

வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகள் பயனற்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புல்லைத் தின்று வாழ்ந்து வரும் வடகொரியர்கள், அணுவாயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை கைவிடமாட்டார்கள் என புடின் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புதிய ஹைட்ரஜன் அணுவாயுத பரிசோதனையை மேற்கொண்டிருந்தது.
குறித்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் வடகொரியா அறிவித்திருந்தது.
ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் தடைகள் மற்றும எச்சரிக்கைகளை மீறி வடகொரியா முன்னெடுத்து வரும் குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன் இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது தொடர்பான தீர்மானம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுதன், குறித்த தீர்மானம் நேற்றைய தினம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்தே விளாடிமிர் புடின் குறித்த தடைகள் தொடர்பான தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறு இராணுவ வெறியில் கட்டுப்பாடற்று நடவடிக்கைகளை சர்வதேசங்கள் மேற்கொண்டு வருவது உலக பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|