வடகொரியா ஏவுதள மறுகட்டமைப்பு பணிகளை தொடர்கிறது!

அணுவாயுதத்தை அழிப்பது தொடர்பான அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஏவுகணைத் தளத்தை புனரமைக்கும் பணிகளை வடகொரியா முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ரொக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன என மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
அணுவாயுதங்களை வடகொரியா கைவிடாவிட்டால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடை நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும் என ஜோன் பொல்டன் தெரிவித்துள்ளார். அத்தோடு அணுவாயுதத்தினால் வடகொரியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ரொக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|