வடகொரியா – அமெரிக்கா இறுதிக்கட்டத்தில் – எச்சரிக்கிறது ரஷ்யா !

வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் நிலை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
கிரெம்ளின் வலைத்தளம் ஒன்றிற்கு ரஷ்ய ஜனாதிபதி எழுதிய கட்டுரையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.குறித்த கட்டுரையில், எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வை எட்ட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரிய தீபகற்பத்தின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது அனைவரும் பாரிய மோதலின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்தியாவில் வறட்சியால் 10 மாநிலங்களில் 33 கோடி மக்கள் பாதிப்பு!
ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டால் ஐரோப்பாவில் தாக்குதல்கள் நிகழலாம் - யூரோபோல் எச்சரிக்கை!
தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - உச்ச நீதிமன்றம்!
|
|