வடகொரியாவை குற்றம் சாட்டும் அமெரிக்கா!

அணு ஆயுத சோதனைக்கு யுரேனியத்தை அதிகளவில் வடகொரியா உற்பத்தி செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
அணுஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை வடகொரியா ரகசியமாக அதிகரித்து வருவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா- வடகொரியா இரு நாட்டு தலைவர்கள் சிங்கப்பூர் சந்திப்பில் அணு ஆயுத சோதனையில் ஈடுபட போவதில்லை என வடகொரியா உறுதியளித்திருந்தது.
இனிமேல் அமெரிக்கர்கள் நிம்மதியாக தூங்கலாம் எனவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அணுஆயுத சோதனைக்காக யுரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
Related posts:
குற்றவாளிகளை பரோலில் விடுதலை செய்ய துருக்கி அரசு திட்டம்?
நீர்த்தேக்கத்தில் வெடிப்பு : நூற்றுக்கணக்கானோர் மாயம்!
ஏமனில் மோசமாகும் நிலைமை: 7,500 சிறுவர்கள் பலி!
|
|