வடகொரியாவை கண்டிக்கும் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!

Saturday, July 15th, 2023

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பார்க் ஜின் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பல விதிமுறைகளை வடகொரியா தெளிவாக மீறியுள்ளதாக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்துங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுர...
முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆதரவு!
நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவு...