வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை!
Thursday, May 17th, 2018
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தினால், பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடுவதாக வட கொரியா தெரிவித்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
”கூட்டம் நடைபெறுவதாக இருந்தால் அதிபர் தயாராக இருக்கிறார்” என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
”அப்படி நடக்கவில்லையெனில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிகபட்ச அழுத்தம் தரும் பிரசாரத்தை தொடர்வோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் தாக்குதல்!
பிரான்சில் குண்டுவெடிப்பு!
சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!
|
|
|


