வடகொரியாவில் வறட்சி!
Saturday, July 22nd, 2017
வடகொரியாவில் மிக கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறார்களும் முதியவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலைமை வடகொரியாவிற்கு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு வடகொரியாவில் நிலவிய பஞ்சத்தின் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!
பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் கொலையில் அதிரடி திருப்பம்!
இந்தியா - சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு !
|
|
|


