பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் கொலையில் அதிரடி திருப்பம்!

Sunday, January 1st, 2017

பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவியை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரேசில் நாட்டுக்கான கிரேக்க தூதர் Kyriakos Amiridis கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து விசாரித்து வந்த அதிகாரிகள், இந்த கொலை தொடர்பாக அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

Kyriakos Amiridisன் மனைவி காவல் துறையைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதை அவர் கண்டித்ததால் கூலிக்கு ஆட்களை வைத்துக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பொலிசார் அறிவித்துள்ளனர்.

பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் Kyriakos Amiridis (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.

அவரை பணத்துக்காக யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. எனவே அவரை பல இடங்களில் பொலிசார் தேடி வந்தனர்.

ஆனால் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டையாக கிடந்தது.

தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.அதை தொடர்ந்து கொலையாளி யார்? ஏன் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவருடைய மனைவி Françoise இன்று ரியோடி ஜெனீரோவில் கைது செய்யப்பட்டார். இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். கிரீஸ் தூதருடன் இவர் பதினைந்து ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: