இந்தியா – சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு !

Friday, September 17th, 2021

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் நேற்றையதினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21ஆவது ஆண்டுக்கூட்டம் தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் இன்று நடைபெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

2001 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் துஷன்பே பயமணமாகியுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்ற அதே நேரம் இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொள்கின்றார்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் வாங்க் யி ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சரவை மட்டத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய – சீனா எல்லையான லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளையும் விலக்கிக்கொள்வது மற்றம் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பிராந்திய அமைதி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: