வடகொரியாவின் விமானம் சீனாவில் தரையிறக்கம்!

Friday, July 22nd, 2016

வடகொரியாவுக்கு சொந்தமான ஏர்கொரியா விமானம் யோங்யாங் நகரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் கபினில் புகை வெளியானது. இதை கவனித்த சில பயணிகள் விமான சிப்பந்திகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக விமானம் சீனாவின் ஷென்யாங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறக்கப்பட்டதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் சில பயணிகளுக்கு மாஸ்குகள் வழங்கப்பட்டன. விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் மோசமான பராமரிப்பே விமானத்தில் தீ பிடித்தற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியா பெரும்பாலும் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட டுபோலே ரக விமானத்தையே பயன்படுத்தி வருகிறது. சோவியத் யூனியன் ரஷ்யா காலகட்டத்தில் உள்ள விமானங்களை இன்னும் உள்நாட்டு பயணத்திற்கு வடகொரியா பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது

Related posts: