வடகொரியாவின் பலத்திற்கு காரணம் அமெரிக்காதான் – ரஷ்யா குற்றச்சாட்டு!
Friday, October 6th, 2017
வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் இராணுவ வலிமையைக் கொண்டு வட கொரியாவை மிரட்டுபவர்களே, அந்நாட்டின் ஆயுத பலம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
மிரட்டல் அதிகரிக்க அதிகரிக்க வட கொரியா தனது ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொண்டே செல்வதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். எனவே, ஆணு ஆயுத பலம் உள்ளிட்ட இராணுவ பலத்தை வட கொரியா பெற இத்தகைய நாடுகளே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவில் 40 ஆயிரம் வட கொரிய மக்கள் பணி புரிந்து வருவதாகக் கூறிய விளாடிமிர் புடின், அவர்கள் ரஷ்யாவின் நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் வடகொரிய ரஷ்ய எல்லையில் வழக்கத்துக்கு மாறாக ராணுவத்தை குவித்ததுடன் ரோந்துப்பணிகளிலும் ரஷ்ய இராணுவம் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


