வடகொரியாவின் நிலைப்பாட்டை மதித்த ட்ரம்ப்!
Thursday, August 24th, 2017
வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அரிசோனா – ஃபொயினிக்ஸில் நடைபெற்ற அமெரிக்காவை மீண்டும் பலப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளிலான மக்கள் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். வடகொரியா, அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அறிவித்திருந்தது.
எனினும் அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்காணித்தே இந்த தாக்குதல் திட்டம் அமுலாக்கப்படும் என்று வடகொரியத் தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலைப்பாட்டை தாம் மதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான அரிதான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜி 7 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!
ஹாங்காங்கில் போராட்டம் - 230 விமானங்கள் இரத்து!
டோகோ ஜனாதிபதி இலங்கை வருகை!
|
|
|


