லொறியுடன் வான் மோதி கோர விபத்து – 9 பேர் பலி!
Monday, July 22nd, 2019
உத்தர பிரதேசம் ஹாபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நேற்று இரவு சிலர் வானில் மீரட் நோக்கி புறப்பட்டனர். இந்த வான் புலந்த்ஷாகர் சாலையில் சித்திக்பூர் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லொறி, வான் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து ஏற்பட்டதும் லொறி ஓட்டுனர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் 9 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Related posts:
மரண தண்டனை சட்டத்தை கொண்டுவருகின்றது துருக்கி?
ஆப்கானிஸ்தான் வான் வழித் தாக்குதலில் பலர் பலி!
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு -‘நானே அதிக அளவில் வென்றேன்’என்கிறார் டொனால்ட் ட்ர...
|
|
|


