ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு!

Saturday, October 21st, 2017

ரோஹிங்கியா அகதிகளில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு அடைக்கலம் தேடிச் சென்றுள்ள 6 லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் 58 சதவீத குழந்தைகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகள் குறித்து ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கடந்த 8 வாரங்களாக நடத்திய ஆய்வின் அறிக்கையை ஜெனிவாவில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அந்த அறிக்கையில், “முகாம்களில் உள்ள குழந்தைகளில் 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அகதிகளுக்கு சுத்தமான நீர், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும் எனவும் சுத்தமான நீர் குடிக்காவிட்டால் கொலரா போன்ற நோயால் பாதிக்கப்படுவர் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: