ரொக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்: இந்திய பிரதமர்!

Monday, November 28th, 2016

 

நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவை செயல்படுத்துவது எளிதானதாக இல்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது ‘மன் கீ பாத்’ என்ற நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து கூறுகையில், ”70 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த பிரச்சனைகளை களையும் போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஆகிய தீமைகளை ஒழிக்கும் போராட்டத்தில் தபால் அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை மிகவும் கடுமையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் அனைவரும் இராணுவத்துடன் துணை நிற்கும் போது அவர்களின் பலம் 125 கோடி முறை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்ட மோதி, டிஜிட்டல் தொழில்நுட்ப தளங்களை மக்கள் தங்களின் கட்டணங்களை செலுத்த பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது இணையதளம் ஆகியவை தேவைப்படாமல் ரூபாய் நோட்டுகள் இல்லாத ஒரு பணப் பரிமாற்றத்தை செய்ய வாய்ப்புகள் உண்டு என்று தெரிவித்த மோதி , ” வாட்ஸ்அப்பில் நகைச்சுவை துணுக்குகளை அனுப்புவதை விட உங்கள் கைப்பேசியை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்வது எளிது ” என்று குறிப்பிட்டார்.

”குறைந்த பணமுள்ள சமுதாயம் என்ற நிலையிலிருந்து நாம் படிப்படியாக ரூபாய் நோட்டுகள் இல்லாத ஒரு சமுதாயத்தை நோக்கி நாம் செல்வோம்” என்று தெரிவித்த மோதி , ”இந்த மாற்றத்துக்கு இளைஞர்கள் மிகப் பெரிய பங்காற்றலாம்” என்று கூறினார்.

தொழில்நுட்ப உதவியோடு வங்கி பயன்பாடுகள் தொழில்நுட்ப விண்ணப்பங்கள் மற்றும் பணம் செலுத்த டிஜிட்டல் முறை வாய்ப்புகள் ஆகியவற்றை பயன்படுத்த சிறு வணிகர்களை தனது உரையின் போது மோதி கேட்டுக் கொண்டார்.

_92680026_modi

Related posts: