ராக்கா நகரை கைப்பற்றுவதே இறுதி இலக்கு – துருக்கி அதிபர்!

Friday, October 28th, 2016

சிரியாவில் ஐ.எஸ் குழுவினரின் கோட்டையாக கருதப்படும் ராக்கா நகரத்தை கைப்பற்றுவதே நோக்கம் என்றும்  இதுவே குறித்த பகுதிக்கான இராணுவ நடவடிக்கைக்கான நோக்கம் என்றும்

துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.

துருக்கி தற்போது சிரியாவின் எதிர்த்தரப்பு போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.அவர்கள் வட சிரியாவில் உள்ள எல்லைப்பகுதியில் நிலப்பரப்பை கைப்பற்றி வருகின்றனர்.

இந்த படையினர் முதலில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள அல்-பாப் நகரை கைப்பற்றுவார்கள் என்று எர்துவான் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, மன்பிஜ் நகரை தாக்குவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மன்பிஜ் நகரம் குர்தீஷ் போராளிகளின் வசமுள்ளது. இவர்கள் பயங்கரவாதிகள் என துருக்கி கருதுகிறது. ஆனால், இறுதி இலக்கு என்பது ராக்கா நகரமாக இருக்கும் என்று எர்துவான் தெரிவித்துள்ளார்.

_92113822_cdece3d4-dfcf-4472-a3a2-77c4ff81a859

Related posts: