ரஷ்ய வைரஸ் அபாயம்- கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் எச்சரிக்கை!
Thursday, May 31st, 2018
ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 500,000 கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மால்வேரானது, தொடர்புகளை சேகரிக்கவும் பிற கணினிகளைத் தாக்கவும் அது எந்த கருவியைத் தாக்கியுள்ளதோ அந்தக் கருவியை அழிக்கவும் கூடியது.
கணினி பயன்படுத்துவோர் தங்கள் Routerகளை Re-Boot செய்யுமாறு FBI அறிவுறுத்தியுள்ளது. இந்த மால்வேர் தாக்குதல் Router-ன் Memory-யில் தன்னையே அப்லோட் செய்து கொள்கிறது.
Re-Boot செய்யும்போது Router-ன் Memory அழிக்கப்படுவதால் தற்காலிகமாக மால்வேர் தொற்று அகற்றப்படுகிறது.
என்றாலும் முழுவதுமாக இந்த மால்வேரை அகற்ற Router-களை Factory Settings ரீசெட் செய்வது ஒன்றுதான் வழியாகும்.
Related posts:
இதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு தெரியுமா
வாட்ஸ்ஆப்பில் வீடியோ கோல்!
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முற்பட்ட சம்பவம் - 11 பேருக்கு 20 வருட சிறை!
|
|
|


