ட்ரம்ப் – புடின் கலந்துரையாடல்

Saturday, July 8th, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் கடந்த வருட அமெரிக்கத் தேர்தலின் போது ரஷ்யா தலையீடு செய்ததாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த விடயம் நேற்று ஜேர்மனியில் ஆரம்பமான ஜி – 20 உச்சிமாநாட்டின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேற்படி கலந்துரையாடல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும்இ குறித்த விடயம் தொடர்பில் மேற்படி இரு நாடுகளும் ஒரு திடமான முடிவுக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது என ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றிய போதுஇ “சமாளிக்க முடியாத கருத்து வேறுபாடு குறித்த அடுத்தகட்ட நகர்வுகளைஇ ட்ரம்ப் சரியான விதத்தில் கையாள்கிறார்” என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ்இ அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை என்பது தொடர்பில் புடின் தெரிவித்த கருத்துக்களை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார் என தெரிவித்தார்.

Related posts: