ரஷ்ய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியும் கண்டுபிடிப்பு!

ரஷ்யாவில் ஞாயிறன்று 92 பயணிகளுடன் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இராணுவ விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல் கறுப்புப் பெட்டி செவ்வாய்கிழமையன்று கண்டுப்பிடிக்கப்பட்டது தற்போது அதை மொஸ்கோவில் ஆராய்ந்து வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியில் இருந்து உடல்கள் மற்றும் உடலின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண்பதற்காக மொஸ்கோவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
டுபோலஃப் – 154 என்ற விமானம் வானிலை சரியாக இருந்த போதிலும் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது; விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலை ஏறும் வீரர் இருவர் 16 ஆண்டுகளின் பின் சடலங்களாக மீட்பு
சுங்கச்சாவடிகளில் மீண்டும் பழைய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!
சீனாவில் மக்கள் தொகை குறைவடைந்து வரும் நிலையில்!
|
|