ரஷ்யாவில் போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் படுகொலை
Monday, April 25th, 2016
ரஷ்யா நாட்டின் சமாரா மாகாணத்தில் உள்ள இவாஸ்கோவா என்ற நகரில் ஆண்ட்ரீகோஸ்ட் (49) என்பவர் காவல் துறையில் துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வேளையில் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆண்ட்ரீ வீட்டைக்கு சென்று பார்த்து உள்ளனர்.
அப்போது வீட்டிற்குள் போலீஸ் அதிகாரி உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அருகில் 7 வயதான குழந்தை ஒன்று உயிருக்கு போராடி இருந்துள்ளது. குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அது கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்ற தகவல்கள் சற்று முன்னர் வெளியானது. இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி, அவரது தந்தை மற்றும் தாய்,போலீஸ் அதிகாரியின் சகோதரர், அவருடைய மனைவி மற்றும் இவர்களுடைய குழந்தை என 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related posts:
|
|
|


