ரஷ்யாவின் புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு செயற்படாது!

Sunday, January 29th, 2017

 

ரஷ்யாவின் விண்வெளி திட்டத்தை மேற்பார்வை செய்யும் நபர், ரஷ்யாவின் மிகுந்த பயன்மிக்க புரோட்டான் ராக்கெட்டுகள் அடுத்த நூறு நாட்களுக்கு இயங்காது என்று தெரிவித்துள்ளார்.

சில ஊழியர்கள் ராக்கெட் தொடர்பான போலி ஆவணங்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று புரோட்டான் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும், வாரந்ஸ் தொழிற்சாலைக்கு வந்திருந்த போது, துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் தெரிவித்தார். ”நாங்கள் அதிர்ஷ்டகார்கள். இது எந்த விபத்திலும் முடியவில்லை,” என்றார்.

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள்தான் கடந்த மாதம் ப்ரோக்ரேஸ் என்ற சரக்கு கப்பல் விபத்திற்கு காரணம் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து தொழிற்சாலையின் தலைவர் கடந்த வாரம் பதவி விலகினார்.

Proton-rocket-400-seithy

Related posts: